ஆரணியில் குப்பைக்கிடங்கை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

ஆரணி அருணகிரிசத்திரம், மில்லர்ஸ் ரோட்டில் நகராட்சி சார்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை பல ஆண்டுகளாக கொட்டி வந்தனர்.
ஆரணியில் குப்பைக்கிடங்கை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
Published on

ஆரணி,

தற்போது அந்த இடத்தை சுற்றிலும் குடியிருப்பு பகுதிகளாக மாறிவிட்டன. இதனால் பொதுமக்கள் குப்பைக்கிடங்கை அகற்ற வேண்டும் என்று நகராட்சி ஆணையாளரிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஆரணி- வந்தவாசி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த ஆரணி டவுன் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் கூறுகையில், மில்லர்ஸ் ரோடு பகுதியில் குப்பை கிடங்கை அகற்றுவதற்காக, கடந்த மாதம் 2-ந் தேதி கோவையை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் மூலமாக உரம் தயாரிப்பதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று உடனடியாக பொக்லைன் எந்திரம் மூலம் ஒட்டுமொத்தமாக குப்பைகளை அகற்றி வேறு இடத்தில் சேர்த்து விட நடவடிக்கை எடுத்து வருகிறாம். இப்போது மத்திய, மாநில அரசுகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 5 இடங்களில் மக்கும், மக்கா குப்பைகள் சேகரித்து அங்கு உரம் தயாரிப்பதற்கும் மறுசுழற்சி செய்து விற்பனை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com