ஆரணியில் மனைவி இறந்த துக்கத்தில் கொத்தனார் தற்கொலை

மனைவி இறந்த துக்கத்தில் கொத்தனார் தற்கொலை செய்து கொண்டார்.
ஆரணியில் மனைவி இறந்த துக்கத்தில் கொத்தனார் தற்கொலை
Published on

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி பாரதியார் தெருவை சேர்ந்தவர் சுகுமார் (வயது 45). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மனைவி இறந்தது முதல் சுகுமார் மிகுந்த துக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சுகுமார் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுகுமார் நேற்று பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்து ஆரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com