செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 55 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 55 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆயிரத்து 319 ஆக உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 55 பேர் பாதிப்பு
Published on

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 55 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆயிரத்து 319 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 49 ஆயிரத்து 125 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 747 ஆக உயர்ந்தது. 447 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 44 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 42 ஆயிரத்து 849 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 41 ஆயிரத்து 852 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 317 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 680 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 29 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 837 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 28 ஆயிரத்து 154 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 434 பேர் உயிரிழந்துள்ளனர். 249 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com