செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 621 பேர் பாதிப்பு 16 பேர் உயிரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 621 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். 16 பேர் உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 621 பேர் பாதிப்பு 16 பேர் உயிரிழப்பு
Published on

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 621 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்து 61 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 311 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்தனர்.

இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 184 ஆக உயர்ந்தது. இதில் 4 ஆயிரத்து 566 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 325 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 ஆயிரத்து 573 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 64 ஆயிரத்து 552 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 7 பேர் உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,090 ஆக உயர்ந்துள்ளது. 1,931 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com