செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 83 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 83 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 83 பேர் பாதிப்பு
Published on

மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 71 ஆயிரத்து 777- ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 68 ஆயிரத்து 327 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2506- ஆக உயர்ந்துள்ளது. 944 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 30 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆயிரத்து 970- ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 73 ஆயிரத்து 386 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 1258 பேர் உயிரிழந்துள்ளனர். 326 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com