கும்மிடிப்பூண்டியில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி இலங்கை அகதி பலி

கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் முகாமைச் சேர்ந்த முதியவர் ஒருவர் ரெயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டியில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி இலங்கை அகதி பலி
Published on

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் முகாமில் வசித்து வந்த முதியவர் தர்மர் (வயது 69). இவர் இலங்கையில் உள்ள வவுனியா நகரை சேர்ந்தவர் ஆவார். இவரது மனைவி சரோஜா (60). இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்தநிலையில், தர்மர் நேற்று முன்தினம் இரவு முகாமையொட்டிய ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார்.

அப்போது அங்கு ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வேகமாக சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையில் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com