காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2,321 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தலில் 8,603 பேர் வேட்புமனு தாக்கல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2,321 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தலில் 8,603 பேர் வேட்புமனு தாக்கல்
Published on

வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த 15-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினம் 22-ந் தேதி முடிவடைந்தது. காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட 11 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 86 பேரும், 98 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 535 பேரும், 274 கிராம ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு 1395 பேரும், 1,938 சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 6,587 பேரும், என மொத்தம் 8,603 பேர், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் ஊராட்சி மன்றம் அலுவலகங்களிலும் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் 2,321 பதவிகளுக்கு போட்டியிட 8,603 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்படைந்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com