கிரு‌‌ஷ்ணகிரியில் அணையில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு போலீசார் விசாரணை

கிரு‌‌ஷ்ணகிரி அணையில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிரு‌‌ஷ்ணகிரியில் அணையில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு போலீசார் விசாரணை
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி நமாஸ்பாறை பாரதியார் நகர் 3-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் அமீர்பாஷா. இவரது மகன் சபிக் (வயது 12). இவன் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று முன்தினம் சபிக் தனது குடும்பத்தினருடன் கிருஷ்ணகிரி அணைக்கு குளிக்க சென்றான்.

இதையொட்டி அணையின் ஒரு பகுதியில் சபிக் குளித்து கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக சபிக் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அவன் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தான். இதைப் பார்த்து அவனது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். ஆனால் சிறிது நேரத்தில் மாணவன் சபிக் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். சபிக்கின் உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.

இது குறித்து கிருஷ்ணகிரி அணை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com