குன்றத்தூரில் மொபட்- லாரி மோதல்; பள்ளி மாணவி பலி

குன்றத்தூரில் மொபட்- லாரி மோதிய விபத்தில் பள்ளி மாணவி பரிதாபமாக பலியானார்.
குன்றத்தூரில் மொபட்- லாரி மோதல்; பள்ளி மாணவி பலி
Published on

பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு சுல்தான் நகரை சேர்ந்தவர் பசில் அகமது (வயது 48), இவரது மகள் அனீசா (15), குன்றத்தூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று காலை அனீசா தனது தந்தையுடன் மொபட்டில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.

குன்றத்தூர் பகுதியில் செல்லும்போது பின்னால் வந்த லாரி, மொபட் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அனீசாவை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அனீசா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com