

மும்பை,
மராட்டியத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட 9 கல்வி மண்டலங்களை சேர்ந்த சுமார் 17 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
மும்பை கல்வி மண்டலத்துக்கு உட்பட்ட மும்பை, தானே, பால்கர், ராய்காட்டில் மட்டும் சுமார் 4 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதி இருந்தனர்.
இந்தநிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (சனிக்கிழமை) மதியம் 1 மணியளவில் வெளியாகிறது. தோவு முடிவினை மாணவர்கள் www.maharesults.nic.in, www.maharashtraeducation.com, www.sscresults.mkcl.org என்ற இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மறுதேர்வு
கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை மராட்டியத்தில் 16 லட்சத்து 28 ஆயிரத்து 613 மாணவர்கள் எழுதியிருந்தனர். இதில் 96 சதவீத மாணவர்கள் (14,56,203 பேர்) தேர்ச்சி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கான மறு தேர்வு ஜூலை மாதம் நடைபெறும். தேர்வு முடிவு வந்தவுடன் தோல்வி அடையும் மாணவர்கள் மறுதேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என மாநில கல்வி வாரியம் அறிவித்து உள்ளது.