மணப்பாறை தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் வக்கீல் கிருஷ்ணகோபால் பிரசாரம்

மணப்பாறை தொகுதியில் உங்களில் ஒருவனாக என்னை நினைத்து வெற்றி பெற செய்யுங்கள் தே.மு.தி.க. வேட்பாளர் வக்கீல் கிருஷ்ணகோபால் பிரசாரம்.
மணப்பாறை தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் வக்கீல் கிருஷ்ணகோபால் பிரசாரம்
Published on

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் அ.ம.மு.க.-தே.மு.தி.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் வக்கீல் கிருஷ்ணகோபால் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று மணப்பாறை ஒன்றியத்தில் பிரசாரம் மேற்கொண்ட அவர் முரசு சின்னத்திற்கு வாக்கு கேட்டு பேசியதாவது:-

இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். இந்த தேர்தலில் மணப்பாறை தொகுதி மக்களாகிய நீங்கள் உங்களில் ஒருவனாக நினைத்து எனக்கு முரசு சின்னத்தில் வாக்களித்து வெற்றியை தர வேண்டும். மணப்பாறை தொகுதியைப் பொறுத்தவரை பின்தங்கிய பகுதியாக உள்ளது. மக்கள் பயன்பெறுகின்ற வகையில் தொழிற்சாலைகளோ, நீண்ட கால கோரிக்கையான கலை அறிவியல் கல்லூரியோ இதுவரை கொண்டுவரப்படவில்லை. கடந்த தேர்தலின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எல்லாம் வாக்குறுதிகளாகவே இருந்து கொண்டிருக்கிறது. என்னால் முடிந்த உதவிகளை இந்த மக்களுக்கு செய்து கொண்டிருக்கிறேன். இந்த தேர்தலில் என்னை வெற்றி பெறச் செய்தால், நிச்சயமாக மணப்பாறை தொகுதி தமிழகத்தின் தலைசிறந்த தொகுதி என்று அனைவரும் போற்றும் வகையில் மாற்றிக் காட்டுவேன்.

மக்களுக்கான திட்டங்களை அரசிடம் கேட்டு விரைந்து செயல்படுத்தி தருவேன். ஆகவே எனக்கு முரசு சின்னத்தில் வாக்களித்து வெற்றியை தாருங்கள் என்று பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com