மேல்மொணவூரில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

மேல்மொணவூரில் நலவாரிய அலுவலகம் முன்பு ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மேல்மொணவூரில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

வேலூர்,

வேலூர் மாவட்ட சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் மேல்மொணவூர் நலவாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கே.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட துணை தலைவர் காசிநாதன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பரசுராமன், மாவட்ட பொதுச் செயலாளர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்குவதை போன்ற பொங்கல் சிறப்பு தொகுப்பு ஆட்டோ தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் உடனே வழங்கிட வேண்டும். இயற்கை மரணத்துக்கு ரூ.1 லட்சம், விபத்து மரண உதவியாக ரூ.5 லட்சம் உயர்த்தி வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் ஆட்டோ டிரைவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ராமு நன்றி கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com