நத்தத்தில் காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்ம சாவு

நத்தத்தில் காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நத்தத்தில் காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்ம சாவு
Published on

நத்தம்,

நத்தம் செல்லம்புதூரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 28). டிரைவர். அவருடைய மனைவி பொன்மணி (23). இவர்கள் கடந்த 7 மாதங் களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

நேற்று முன்தினம் பொன்மணி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். பொன்மணி பிணமாக தொங்குவதை கண்டு விஜயகுமார் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நத்தம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பொன்மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பொன்மணியின் தாயார் அமராவதி புகார் கொடுத்துள்ளார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்பேரில் போலீசார் மர்ம சாவு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பொன்மணிக்கு திருமணம் முடிந்து 7 மாதங்களே ஆவதால் திண்டுக்கல் ஆர்.டி.ஓ. ஜீவாவும் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com