நவிமும்பையில் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 2½ வயது சிறுமி பலி

தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 2½ வயது சிறுமி பலியானாள்.
நவிமும்பையில் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 2½ வயது சிறுமி பலி
Published on

மும்பை,

நவிமும்பை ஐரோலி செக்டர்-9 ம் பகுதியில் உள்ள கட்டிடத்தில் ஒருவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் கட்டிடத்தின் காம்பவுண்ட் பகுதியில் வசித்து வருகிறார். இவரது மகளான நிகிதா(வயது 2) சம்பவத்தன்று இரவு காம்பவுண்டில் விளையாடி கொண்டிருந்தாள். திடீரென காணாமல் போனதால் பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தனர். எங்கும் கிடைக்காமல் போனதால் மகள் கடத்தப்பட்டதாக போலீசில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் கட்டிடத்தில் உள்ள தொட்டியில் இருந்து வந்த குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக புகார் வந்தது. இதன்படி கட்டிடவாசிகள் அங்குள்ள குடிநீர் தொட்டிற்கு சென்று பார்த்தனர். அங்கு காணாமல் போன சிறுமி நிகிதா தொட்டிக்குள் பிணமாக கிடந்தது தெரியவந்தது.

இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com