பள்ளிப்பட்டில் உறவினர் வீட்டில் நகை திருடிய பெண் கைது

பள்ளிப்பட்டு மடம் தெருவில், வீட்டில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகையை காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.
பள்ளிப்பட்டில் உறவினர் வீட்டில் நகை திருடிய பெண் கைது
Published on

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு மேற்கு தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 30). இவரது மனைவி கனகா (25). இவரது சித்தி லதா (50). பள்ளிப்பட்டு மடம் தெருவில் வசித்து வருகிறார். லதா தனது வீட்டில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகையை காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டில் அனைத்து இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவர் பள்ளிப்பட்டு போலீசில் நகை காணாமல் போனது குறித்து புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் லதாவின் அக்கா மகள் கனகா அடிக்கடி சித்தியின் வீட்டுக்கு வந்து சென்றது தெரிய வந்தது. இதனால் போலீசார் கனகாவிடம் விசாரணை செய்தனர். இதில் தனது சித்தி வீட்டில் நகை திருடியதை கனகா ஒப்புக்கொண்டார்.

திருடிய நகைகளை பள்ளிப்பட்டு, நகரி பகுதிகளில் உள்ள அடகு கடைகளில் அடகு வைத்ததாக கனகா ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து போலீசார் கனகாவை கைது செய்து பள்ளிப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com