பெரம்பலூரில் ஒரே நாளில் 141 பேருக்கு தொற்று

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 141 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூரில் ஒரே நாளில் 141 பேருக்கு தொற்று
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில், பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதியில் 86 பேருக்கும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 24 பேருக்கும், வேப்பூர் வட்டாரத்தில் 16 பேருக்கும், ஆலத்தூர் வட்டாரத்தில் 15 பேருக்கும் என மொத்தம் 141 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 3,334 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 30 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 2,747 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 557 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 684 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. கொரோனாவுக்கு தற்போது அரியலூர் மாவட்டத்தை காட்டிலும், பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com