சேலத்தில் 29 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் கலெக்டர் ரோகிணி வழங்கினார்

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார்.
சேலத்தில் 29 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் கலெக்டர் ரோகிணி வழங்கினார்
Published on

சேலம்,

தொடர்ந்து பொது மக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 411 மனுக்களை பெற்றார். பின்னர் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் மீது காலதாமதமின்றி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பின்னர் 29 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ4 லட்சத்து 93 ஆயிரத்தில் அதிநவீன செயற்கை கால்களை கலெக்டர் ரோகிணி வழங்கினார்.

மேலும் ஒருவருக்கு ரூ.9 ஆயிரத்து 700 மதிப்புள்ள விலையில்லா தையல் எந்திரம் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெகநாதன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com