சேலத்தில், நர்சு தூக்குப்போட்டு தற்கொலை - திண்டுக்கல்லை சேர்ந்தவர்

சேலத்தில், திண்டுக்கல்லை சேர்ந்த நர்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலத்தில், நர்சு தூக்குப்போட்டு தற்கொலை - திண்டுக்கல்லை சேர்ந்தவர்
Published on

சேலம்,

திண்டுக்கல் மாவட்டம் உலகம்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் மரியம் மாணிக்கம். இவருடைய மகள் சகாயஆனந்தி (வயது 26). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார்.

இவர் ஆஸ்பத்திரிக்கு சொந்தமான விடுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் வேலைக்கு சென்றார். வேலை முடிந்து அன்று இரவு விடுதியில் உள்ள ஒரு அறைக்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று காலை வெகு நேரம் ஆகியும் அறை திறக்க வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் சென்று கதவை தட்டினர். ஆனாலும் அறை கதவு திறக்க வில்லை.

பின்னர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அவர் அந்த அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

இது குறித்து தகவல் அறிந்த பள்ளப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சகாயஆனந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து சகாய ஆனந்தி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com