ஸ்ரீபெரும்புதூரில் வடமாநில பெண் மர்மச்சாவு

ஸ்ரீபெரும்புதூரில் வடமாநில பெண் மர்மமான முறையில் இறந்தார்.
ஸ்ரீபெரும்புதூரில் வடமாநில பெண் மர்மச்சாவு
Published on

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செட்டிபேடு பகுதியில் தங்கி தண்டம் பகுதியில் உள்ள பெண்கள் அழகு நிலையத்தில் வேலை செய்து வந்தவர் சுங் சூன் மொய் (வயது 22). நாகலாந்து மாநிலத்தை சேர்ந்தவர். இவருடன் 10 வடமாநில பெண்கள் தங்கி இருந்தனர்.

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு சென்று தூங்கி விட்டார்.
இந்த நிலையில் நேற்று காலை மற்ற பெண்கள் எழுந்து பார்த்தபோது சுங் சூன் மொய் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை பார்த்த அந்த பெண்கள் அதிர்ச்சி அடைந்து ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர் விநாயகம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com