வடக்கனந்தல் பேரூராட்சி பகுதியில் பேனர் கொடிக்கம்பங்கள் அகற்றும் பணி தீவிரம்

வடக்கனந்தல் பேரூராட்சி பகுதியில் பேனர் கொடிக்கம்பங்கள் அகற்றும் பணி தீவிரம்
வடக்கனந்தல் பேரூராட்சி பகுதியில் பேனர் கொடிக்கம்பங்கள் அகற்றும் பணி தீவிரம்
Published on

கச்சிராயப்பாளையம்

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 19- ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. வடக்கனந்தல் பேரூராட்சி அலுவலகத்திலும் வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதையடுத்து பேரூராட்சி அலுவலகத்தின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. முதல்நாளான நேற்று யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை.

இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆறுமுகம் தலைமையில், துணைத் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பழனிவேல் மற்றும் ஊழியர்கள் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள், கொடிக்கம்பங்களை அகற்றும் பணியிலும், தலைவர்களின் சிலைகளை மூடி மறைக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com