

கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் முன்கள பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கையாக 3-வது தவணை(பூஸ்டர்) கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து அவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டார். தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் ஆகியோரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
இந்த முகாமில் முன் களப்பணியாளர்கள், கலந்து கொண்டு 3-வது தவணை தடுப்பூசியினை செலுத்திக்கொண்டனர். தொடர்ந்து கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கான தடுப்பூசி முகாமை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட தகுதியுடைய அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார். இதில் போலீசார்கள், மருத்துவ அதிகாரிகள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், முன்கள பணியாளர்கள் கலந்து கொண்டனர்.