விக்கிரமங்கலம் அருகே சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து தொழிலாளி பலி 3 பேர் காயம்

விக்கிரமங்கலம் அருகே சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்ததில் தொழிலாளி பலியானார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.
விக்கிரமங்கலம் அருகே சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து தொழிலாளி பலி 3 பேர் காயம்
Published on

விக்கிரமங்கலம்,

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள உல்லியக்குடி காட்டுப்பகுதியில் இருந்து விறகுகளை ஏற்றிக்கொண்டு நேற்று லாரி ஒன்று ஜெயங்கொண்டம் நோக்கி சென்றது. அப்போது லாரியை உல்லியக்குடி பெரியார்நகர் பகுதியை சேர்ந்த சக்ரவர்த்தி(வயது 40) ஓட்டிவந்தார். லாரியில் மரம் வெட்டும் தொழிலாளர்களான உல்லியக்குடியை சேர்ந்த வீரமுத்து(60), செல்வம்(35), சுரேஷ்குமார்(32) ஆகியோர் அமர்ந்து வந்தனர். லாரி உல்லியக்குடி அண்ணாநகர் வளைவில் திரும்பிய போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் தொழிலாளி வீரமுத்து படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

மற்ற 3 பேரும் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்கண்ணன் மற்றும் போலீசார் வீரமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com