செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 531 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 531 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 531 பேர் பாதிப்பு
Published on

செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 31 ஆயிரத்து 534 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 642 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,639 ஆக உயர்ந்துள்ளது. 9,253 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 158 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 93 ஆயிரத்து 445 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 89 ஆயிரத்து 235 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,293 ஆக உயர்ந்துள்ளது. 2,917 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com