திருத்தணியில் பெண் கொலை

திருத்தணியில் பெண் கொலை, தாய் சுஜாதா, தனது மகள் சாவில் மர்மம் உள்ளது என திருத்தணி போலீசில் புகார் செய்தார்.
திருத்தணியில் பெண் கொலை
Published on

திருத்தணி,

திருத்தணி கார்த்திகேயபுரம் கவுரி அம்மன் நகரை சேர்ந்தவர் துர்கன் (வயது 28). இவரது மனைவி சிவபிரியா (25). இவர்கள் இருவரும் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டத்தில், சிவபிரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என துர்கன் தெரிவித்தார். ஆனால், சிவபிரியாவின் தாய் சுஜாதா, தனது மகள் சாவில் மர்மம் உள்ளது என திருத்தணி போலீசில் புகார் செய்தார். புகாரின் மீது போலீசார் வழக்கு பதிந்து துர்கனிடம் விசாரணை நடத்திய போது, கழுத்தை நெருக்கி கொலை செய்தேன் என துர்கன் ஒப்புக்கொண்டார்.

துர்கன் போலீசாரிடம் கூறியதாவது:-

சிவபிரியா ஏற்கனவே திருமணம் ஆனவர். அடிக்கடி சிவபிரியா தனது தாய் வீட்டுக்கு சென்று முதல் கணவர் மற்றும் குழந்தைகளை பார்த்து வந்தார். இது எனக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்று தாய் வீட்டிற்கு செல்லக்கூடாது என சிவபிரியாவை கண்டித்தேன். இதனால் எங்களுக்குள் ஏற்பட்ட தகராறில், ஆத்திரம் அடைந்து, நான் தலையணையால் சிவபிரியா முகத்தில் அழுத்தியும், கழுத்தை நெருக்கி கொலை செய்தேன். இதற்கு என்னுடைய நண்பர் லோகேஷ் (25) உடந்தையாக இருந்தார்.

இவ்வாறு அவர் கூறினார். போலீசார் துர்கன், லோகேஷ் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com