திருவாடானை, நகரிகாத்தானில் இன்று மின்தடை

திருவாடானை மற்றும் நகரிகாத்தான் பகுதிகளில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருவாடானை, நகரிகாத்தானில் இன்று மின்தடை
Published on

தொண்டி,

திருவாடானை மற்றும் நகரிகாத்தான் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனையொட்டி இன்று காலை 9.45 மணி முதல் மதியம் 1.45 மணி வரை திருவாடானை, சி.கே.மங்கலம், கருமொழி, டி.நாகணி, அஞ்சுகோட்டை, மங்கலக்குடி, வெள்ளையபுரம், ஆண்டாவூரணி, கட்டிவயல், என்.எம்.மங்கலம், ஊருணிக்கோட்டை, பாண்டுகுடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com