திருவாரூரில், ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி

திருவாரூரில் ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது.
திருவாரூரில், ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி
Published on

திருவாரூர்,

கொரோனா நோய் தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஜூன் மாதத்திற்கு பொருட்கள் வாங்குவதற்கு ரேஷன் கடைகளில் கூட்டத்தை தவிர்க்க வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் சமூக இடைவெளியுடன் பொருட்கள் பெற்று கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 79 ஆயிரத்து 996 குடும்ப அட்டைகள் உள்ளன. மாவட்டம் முழுவதும் 728 ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஜூன் மாத பொருட்கள் வழங்குவதற்கான பணி தொடங்கப்பட உள்ளது.

டோக்கன் வழங்கும் பணி

இதனையொட்டி நேற்று திருவாரூரில் ரேஷன் கடைகளில் கூட்டத்தை தவிர்க்கும் நோக்கத்துடன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணி மேற்கொண்டனர். இந்த பணி சில நாட்களில் முடிக்கப்பட்டு வருகிற 5-ந்தேதிக்கு மேல் ஜூன் மாத ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com