திருக்கோவிலூரில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் அவதி

திருக்கோவிலூரில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் அவதி
திருக்கோவிலூரில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் அவதி
Published on: 

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் நகரில் கடந்த சில நாட்களாகவே திடீர் திடீரென மின்தடை ஏற்படுவதும் பின்னர் மின் வினியோகம் செய்வதும், திடீர் உயர் மின் அழுத்தம் ஏற்படுவதும் என்ற நிலை இருந்து வருகிறது. மின்தடையால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். மேலும் உயர் மின் அழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் பழுதடைந்து வீண் செலவுகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே மின்தடை மற்றும் உயர் மின்அழுத்தம் இல்லாமல் சீரான மின் வினியோகம் செய்ய மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com