இருவேறு விபத்துகளில் 2 பேர் பலி

காஞ்சீபுரம் சாலை தெருவை சேர்ந்தவர் பிச்சாண்டி. இவரது மனைவி சந்திரா (வயது 50). இவர் காஞ்சீபுரம் குஜராத் சத்திரம் ஜங்சன் என்ற இடத்தில் சாலையை கடக்க நின்றிருந்தார். அப்போது திடீரென ஒரு தனியார் பஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் சந்திரா மீது மோதியது.
இருவேறு விபத்துகளில் 2 பேர் பலி
Published on

காஞ்சீபுரம்,

ஆபத்தான நிலையில் இருந்த அவரை உடனடியாக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்து பார்த்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து உயிரிழந்த சந்திராவின் மகன் அய்யப்பன் பெரிய காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பழனி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

காஞ்சீபுரத்தை அடுத்த செட்டியார்பேட்டையை சேர்ந்தவர் மாரி இவரது மனைவி சாரதா (48). இவர் செட்டியார்பேட்டை பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது வேலூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு கார் சாரதா மீது மோதியது. இதில் அவர் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com