ஊரப்பாக்கத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு

ஊரப்பாக்கத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் 10 பவுன் நகை பறிக்கப்பட்டது.
ஊரப்பாக்கத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு
Published on

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் செல்வராஜ் நகர் 5-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வைஷ்ணவி (வயது 31), இவர் நேற்று முன் தினம் இரவு வீட்டின் அருகே உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வைஷ்ணவி அணிந்து இருந்த 10 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டனர்.

இது குறித்து வைஷ்ணவி கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com