கந்திகுப்பம் அருகே முன்னாள் ராணுவ வீரர் உள்பட 2 பேர் தற்கொலை

பர்கூர், கந்திகுப்பம் அருகே முன்னாள் ராணுவ வீரர் உள்பட 2 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
கந்திகுப்பம் அருகே முன்னாள் ராணுவ வீரர் உள்பட 2 பேர் தற்கொலை
Published on

முன்னாள் ராணுவ வீரர்

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே உள்ள காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 58). முன்னாள் ராணுவவீரர். இவரது மனைவி லட்சுமி (51). இவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் தங்கராஜிக்கும், அவருடைய தம்பி சந்திரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த தங்கராஜ் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் கருகிய அவர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கராஜ் இறந்தார். இது தொடர்பாக கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரனை கைது செய்தனர்.

வாலிபர் தற்கொலை

கந்திகுப்பம் அருகே உள்ள சின்ன சுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் குழந்தைசாமி. இவருடைய மகன் சூர்யபிரகாஷ் (18). இவர் அப்பகுதியில் உள்ள தாபா ஓட்டலில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். சூர்யபிரகாஷ் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இதனால் அவருடைய தந்தை, சூர்யபிரகாசை திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சூர்யபிரகாஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த கந்திகுப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com