மல்லி விலை உயர்வு

விருதுநகர் மார்க்கெட்டில் மல்லி விலை உயர்ந்து காணப்படுகிறது.
மல்லி விலை உயர்வு
Published on

விருதுநகர்,

விருதுநகர் மார்க்கெட்டில் மல்லி விலை உயர்ந்து காணப்படுகிறது.

உளுந்து

உளுந்து 100 கிலோ மூடை ரூ.9,600 முதல் ரூ.10,300 வரையிலும், உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.10,700 முதல் ரூ.12,200 வரையிலும், தொலி உளுந்தம் பருப்பு ரூ. 9,200 முதல ரூ.9,700 வரையிலும் விற்பனை ஆனது. பாசிப்பருப்பு 100 கிலோ மூடை ரூ.11,700 முதல் ரூ.12,200 வரையிலும், பாசிப்பயறு ரூ.8,200 முதல் ரூ. 8,700 வரையிலும் விற்பனையானது.

வத்தல்

துவரை 100 கிலோ மூடை ரூ. 6,800 முதல் ரூ.7,900 வரையிலும், துவரம்பருப்பு ரூ.10,100 முதல் ரூ.11,100 வரையிலும் விற்பனையானது.

மல்லி லைன் ரகம் 40 கிலோ ரூ. 500 விலை உயர்ந்து ரூ.3,450 முதல் ரூ. 3,550 வரையிலும், மல்லி நாடுரகம் ஆயிரம் விலை உயர்ந்து ரூ.5 ஆயிரம் வரை விற்பனையானது.

முண்டு வத்தல் விலை உயர்ந்து ரூ.30 ஆயிரம் முதல் ரூ. 31 ஆயிரம் வரையிலும், ஏ.சி. வத்தல் ரூ.14,700 முதல் ரூ.15,150 ஆயிரம் வரையிலும், புது வத்தல் ரூ.500 விலை உயர்ந்து ரூ.9,500 முதல் ரூ. 13 ஆயிரம் வரையும் விற்பனையானது.

சமையல் எண்ணெய்

கடலை எண்ணெய்15 கிலோ ரூ.50 விலை உயர்ந்து ரூ.2,850 ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.3,648 ஆகவும், பாமாயில் 15 கிலோ ரூ.40 விலை உயர்ந்து ரூ. 2,030 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ரூ. 2 ஆயிரம் ஆகவும் விற்பனையானது.

நிலக்கடலை பருப்பு 80 கிலோ ரூ.100 விலை உயர்ந்து ரூ.7,500 ஆக விற்பனையானது. கடலை புண்ணாக்கு100 கிலோ ரூ. 4,150ஆகவும், எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ. 1,900 ஆகவும் விற்பனையானது.

மைதா

சீனி 100 கிலோ ரூ. 3,480 ஆகவும், கொண்டைக்கடலை குவிண்டால் ரூ.5,000 ஆகவும், பொரிகடலைரூ. 3,900 ஆகவும், மைதா முதல் ரகம் ரூ.20 விலை உயர்ந்து ரூ.3,520 ஆகவும், 2-ம் ரகம் ரூ.220 விலை உயர்ந்து ரூ. 2,620 ஆகவும், ஆட்டா 25 கிலோரூ. 900 ஆகவும், ரவை 25 கிலோ ரூ.1, 120 ஆகவும், கோதுமை தவிடு 50 கிலோ ரூ.20 உயர்ந்து ரூ. 770 ஆகவும், பட்டாணி 100 கிலோ ரூ.8,100 ஆகவும், பட்டாணி பருப்பு ரூ.8,300 ஆகவும் விற்பனை ஆனது.

மசூர் பருப்பு ரூ.7,100 ஆகவும் விற்பனையானது. காபி பிளாண்டேஷன் பிபி ரகம் 50 கிலோ ரூ. 13,750 ஆகவும்,ஏ ரகம் ரூ.16,250 ஆகவும் சி ரகம் ரூ.11,000 ஆகவும், ரோபஸ்டா ஏ ரகம் ரூ.8 ஆயிரமாகவும், பிளாக் பிரவுன் ரகம் ரூ.7 ஆயிரமாகவும் விற்பனையானது.

X

Daily Thanthi
www.dailythanthi.com