கார் மோதி பெண் படுகாயம்

கார் மோதி பெண் படுகாயம் அடைந்தார்.
கார் மோதி பெண் படுகாயம்
Published on

நொய்யல்,

புன்னம்சத்திரம் அருகே பொன்னியாக்கவுண்டன் புதூர் ஆசாரி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மனைவி சுந்தரி (வயது 37). இவர் தனது மோட்டார் சைக்கிளில் கரூர்- ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது புன்னம்சத்திரம் பகுதியில் தனியார் பள்ளி அருகே வந்தபோது மூலிமங்கலம் கிழக்கு தெருவை சேர்ந்த பாஸ்கரன் (39) என்பவர் அதிவேகமாக ஓட்டி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சுந்தரியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கரூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி காரை அதிவேகமாக ஓட்டி வந்த பாஸ்கரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com