

கோத்தகிரி
கொரோனா 2-வது அலை பரவல் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இதன்படி கோத்தகிரி பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் மேற்பார்வையில், கோத்தகிரியில் தினந்தோறும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான மார்க்கெட், காந்தி மைதான திறந்த வெளி மார்க்கெட், அரசு அலுவலகங்கள், சாலைகள், கிராம பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
பேரூராட்சி ஊழியர்கள் 2 லாரிகள் மூலம் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். ஊரடங்கையொட்டி கோத்தகிரி நகரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.