

கரூர்,
தாந்தோன்றிமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் நடைபெற்ற கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடத்திற்கான நேர்காணலை கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடத்திற்கான நேர்காணல் வருகிற 26-ந் தேதி வரை (24-ந்தேதி தவிர மற்ற நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை) நடைபெறும். மொத்தம் 24 பணியிடங்களுக்கு 3 ஆயிரத்து 582 விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகிறது. ஒரு நாளைக்கு தினசரி 800 நபர்கள் வீதம் 4 நாட்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. இதில், சான்றிதழ் சரிபார்ப்பு, கால்நடை பராமரிப்பு, மிதிவண்டி ஓட்டுதல் போன்ற அடிப்படை செயல்முறைகள் குறித்து நேர்காணல் நடைபெறும் இடத்தை நேரில் சென்று கலெக்டர் பார்வையிட்டார்.