6 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்-முதியவருக்கு 7 ஆண்டு சிறை; ஈரோடு மகிளா கோர்ட்டு தீர்ப்பு

6 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
6 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்-முதியவருக்கு 7 ஆண்டு சிறை; ஈரோடு மகிளா கோர்ட்டு தீர்ப்பு
Published on

ஈரோடு

6 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்

சத்தியமங்கலம் சிக்கரசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சோமன் (வயது 75). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 21-ந்தேதி சத்தியமங்கலத்தை சேர்ந்த அரசு பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமியை, அவருடைய வீட்டின் கழிப்பறைக்கு அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து சிறுமி இதுபற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். பின்னர் அவர்கள் இதுபற்றி சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் சோமனை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை ஈரோடு மகிளா விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது.

முதியவருக்கு 7 ஆண்டு சிறை

இந்த நிலையில், நீதிபதி மாலதி வழக்கின் இறுதி விசாரணை முடித்து நேற்று தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த சோமனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்தார். அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாத சிறை தண்டனை அனுபவிக்கவும் அவர் உத்தரவிட்டு இருந்தார்.

மேலும், பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரண தொகையாக ரூ.50 ஆயிரத்தை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி மாலதி பரிந்துரைத்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெயந்தி ஆஜரானார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com