

நெய்க்காரபட்டி
பழனியை அடுத்த நெய்க்காரபட்டி பெரியகலையம்புத்தூரில் உள்ள ஐகோர்ட்டு பத்திரகாளியம்மன் கோவில் நிர்வாகம் சார்பில், பல ஆண்டுகளாக தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு விதித்த தடையையொட்டி, கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தவில்லை. இதனால் ஜல்லிக்கட்டு நடத்துவோர், மாடுபிடி வீரர்கள், பொதுமக்கள் ஆகியோர் வேதனை அடைந்துள்ளனர்.
இதற்கிடையே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வலியுறுத்தி தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டம் நடந்து வருகிறது. அதன்படி ஐகோர்ட்டு பத்திரகாளியம்மன் கோவில் நடுத்தெரு, கிழக்குத்தெருவில் வசிக்கிற பொதுமக்கள் நெய்க்காரபட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு சுப்ரீம் கோர்ட்டை அணுகி ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி பெற்று தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிகோரி நெய்க்காரபட்டி பெரியகலையம்புத்தூர் பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் நேற்று அடைக்கப்பட்டிருந்தன.