காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கியபோது வீடு புகுந்து நகை-பணம் திருட்டு

சென்னை போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கல், அன்னை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்.
காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கியபோது வீடு புகுந்து நகை-பணம் திருட்டு
Published on

பூந்தமல்லி,

சென்னை போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கல், அன்னை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். கட்டிடத்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு குடும்பத்தினருடன் தூங்கினார்.

நேற்று காலை எழுந்து பார்த்தபோது, நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 7 பவுன் நகைகள், ரூ.15 ஆயிரத்தை திருடிச் சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com