கபடி போட்டி

இளையான்குடி அருகே கபடி போட்டி நடந்தது.
கபடி போட்டி
Published on: 

இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ள சீத்தூரணி கிராமத்தில் இளைஞர் மன்றம் சார்பாக கபடி போட்டி நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் தமிழரசி எம்.எல்.ஏ. கபடி போட்டியை தொடங்கிவைத்து பேசினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், விவசாய அணி காளிமுத்து, கருணாகரன், மலைமேகு, ராஜபாண்டி, அழகேசன், முனியாண்டி, ஆனந்த் மற்றும் ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பணப்பரிசுடன் வெற்றிக் கோப்பை பரிசளிக்கப்பட்டது. சுற்றுவட்டார கிராம கபடி குழுவினர் போட்டியில் கலந்துகொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com