திருச்சியில் சிறுமி உள்பட 2 பேர் கடத்தலா? போலீசார் விசாரணை

திருச்சியில் சிறுமி உள்பட 2 பேர் கடத்தலா? போலீசார் விசாரணை
திருச்சியில் சிறுமி உள்பட 2 பேர் கடத்தலா? போலீசார் விசாரணை
Published on

திருச்சி,

திருச்சி மேலவாளடியை சேர்ந்தவர் கருப்பையா. இவருடைய மகள் சரஸ்வதி (வயது 17). இவர் உறையூரில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கியிருந்து அருகே உள்ள கடலை மிட்டாய் கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 17-ந்தேதி மாமா வீட்டில் இருந்து வெளியே சென்ற சரஸ்வதி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சரஸ்வதியின் தாய் கண்ணகி மகளை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் எங்கு தேடியும் சரஸ்வதி கிடைக்காததால் கண்ணகி உறையூர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரஸ்வதியை யாரேனும் கடத்தி சென்றனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.

இதேபோல் திருச்சி கோட்டை பீரங்கி குளத்தெருவை சேர்ந்தவர் ஹென்றிராஜன். இவருடைய மகள் வெர்ஜின் அடின்சியா(19). 12-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்துள்ள வெர்ஜின் அடின்சியா கடந்த 19-ந்தேதி வீட்டில் இருந்த பெற்றோரிடம் அருகே உள்ள கடைக்கு சென்று வருவதாக கூறி விட்டு வெளியே சென்றார். பின்னர் மீண்டும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தாய் லெட்சுமி மகளை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் தாய் லெட்சுமி கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெர்ஜின் அடின்சியாவை யாரேனும் கடத்தி சென்றனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி, தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com