மணல்கொள்ளையை தடுக்க முயன்றவர் கொலை; போலீசாரால் தேடப்பட்ட 2 வாலிபர்கள் கோர்ட்டில் சரண்

ராமநாதபுரம் அருகே மணல்கொள்ளையை தடுக்க முயன்ற முன்னாள் ஊராட்சி துணைத்தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த 2 வாலிபர்கள் கமுதி கோர்ட்டில் சரணடைந்தனர்.
மணல்கொள்ளையை தடுக்க முயன்றவர் கொலை; போலீசாரால் தேடப்பட்ட 2 வாலிபர்கள் கோர்ட்டில் சரண்
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள இளமனூர் பகுதியில் கடந்த 2ந் தேதி மணல் கொள்ளையை தடுக்க சென்ற முன்னாள் ஊராட்சி துணைத்தலைவர் மோகன் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரிந்த 5 பேர் உள்ளிட்ட கும்பலை தேடிவருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மணல்குவாரி உரிமையாளர் மஞ்சலோடை ஆனந்தராஜ் என்பவர் கடந்த சில நாட்களுக்குமுன் காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் கோர்ட்டில் சரண்டைந்தார்.

மற்றவர்களை போலீசார் தேடிவந்த நிலையில் ராமநாதபுரம் வண்டிக்காரத்தெரு ராஜேந்திரன் மகன் ஹாரிஷ்(வயது23), பேராவூர் கழுங்கு மகன் முனியசாமி(35) ஆகியோர் நேற்று கமுதி கோர்ட்டில் சரணடைந்தனர். இவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இந்த வழக்கில் 3 பேர் சரணடைந்துள்ள நிலையில் மீதம் உள்ள ஜெயபாரத் மற்றும் கார்த்திக் ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com