மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு

ஒடுகத்தூர் அருகே மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு
Published on

அணைக்கட்டு,

ஒடுகத்தூரை அடுத்த தென்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 38), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி இளவரசி (28). இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி இரவு கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த ஸ்ரீதர், மனைவி இளவரசியை கழுத்தை அறுத்து கொலை செய்தார். மறுநாள் காலையில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இளவரசி எங்கே என்று ஸ்ரீதரிடம் கேட்டுள்ளனர்.

பின்னர் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, இளவரசி கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து ஸ்ரீதர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். உடனே பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com