பூலாம்பட்டி அருகே நிலத்தகராறில் பெண்ணுக்கு கத்திக்குத்து

பூலாம்பட்டி அருகே நிலத்தகராறில் பெண்ணுக்கு கத்திக்குத்து.
பூலாம்பட்டி அருகே நிலத்தகராறில் பெண்ணுக்கு கத்திக்குத்து
Published on

எடப்பாடி,

பூலாம்பட்டி அருகே உள்ள வெள்ளரிவெள்ளி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். விவசாயி (வயது 49). இவருடைய மனைவி தமிழரசி (44). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த, இவர்களது உறவினர் ராஜா (47) என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று தமிழரசி நிலத்தில் உள்ள கற்களை அகற்றி கொண்டிருந்த போது, அங்கு வந்த ராஜா, தமிழரசியிடம் தகராறு செய்துள்ளார். மேலும் அவர், தமிழரசியின் கையில் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. ராஜாவின் உறவினர்களும் சேர்ந்து தமிழரசியை தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த தமிழரசி சிகிச்சைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் பூலாம்பட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com