மேலும் 36 பேருக்கு கொரோனா

மேலும் 36 பேருக்கு கொரோனா
மேலும் 36 பேருக்கு கொரோனா
Published on

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் தற்போது திருப்பூர், கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்து 46ஆக உயர்ந்துள்ளது.

இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 30 பேர் குணமடைந்தனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 549க உள்ளது. கொரோனா பாதித்த 273 பேர் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 224 பேர் சிகிச்சை பலன் இன்றி பலியாகியுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com