23 பேருக்கு கொரோனா

23 பேருக்கு கொரோனா
23 பேருக்கு கொரோனா
Published on

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் மேல்சிகிச்சைக்காக கோவை, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 706 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 224 ஆக உள்ளது.

நேற்று ஒரேநாளில் 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 208 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 18 ஆயிரத்து 274 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com