மேலும் 31 பேருக்கு கொரோனா

மேலும் 31 பேருக்கு கொரோனா
மேலும் 31 பேருக்கு கொரோனா
Published on

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்து வருகிறார்கள். நேற்று மேலும் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 590-ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் கொரோனா பாதித்த 13 பேர் குணமடைந்தனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 216-ஆக உள்ளது. மேலும், 150 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 224 பேர் சிகிச்சை பலன் இன்றி பலியாகியுள்ளனர்.

----------------

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com