கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை

அடிப்படை வசதிகள் செய்துதர கோரி கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை
Published on

கோவில்பட்டி,

அடிப்படை வசதிகள் செய்துதர கோரி கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

அடிப்படை வசதிகள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஈராட்சி பஞ்சாயத்துக்கு உட்பட்டது கசவன்குன்று கிராமம். இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் நீண்ட நாட்களாக வாறுகால் சுத்தம் செய்யப்படவில்லை.

மேலும் குடிநீர், மின்விளக்கு, ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

முற்றுகை

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் நேற்று கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கூடுதல் ஆணையாளர் முருகானந்தம் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், அடிப்படை வசதிகள் செய்துதர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் கோரிக்கை மனுவை அவரிடம் வழங்கிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com