நடுரோட்டில் லாரி கவிழ்ந்தது; வாலிபர் பலி

வேப்பூர் அருகே நடுரோட்டில் லாரி கவிழ்ந்த விபத்தில் வாலிபர் பலியானார்.
நடுரோட்டில் லாரி கவிழ்ந்தது; வாலிபர் பலி
Published on

வேப்பூர்,

தேனி மாவட்டம் அம்மாபட்டியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன்(வயது 23). இவர் சென்னையில் இருந்து எருமை மாடுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு தேனிக்கு புறப்பட்டார். அந்த லாரியை அம்மா பட்டியை சேர்ந்த சதீஷ்குமார்(30) என்பவர் ஓட்டினார். மேலும் அந்த லாரியில் மணிமுருகன் உள்பட 3 பேர் பயணம் செய்தனர்.

இந்த லாரி நேற்று அதிகாலை 5 மணி அளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சேப்பாக்கம் என்ற இடதில் வந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தாறுமாறாக ஓடி நடுரோட்டில் கவிழ்ந்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com