நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்-பணியாளர்களை தாக்கிய போலீஸ்காரர் மீது வழக்கு

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், பணியாளர்களை தாக்கிய போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்-பணியாளர்களை தாக்கிய போலீஸ்காரர் மீது வழக்கு
Published on

நெல்லை,

தூத்துக்குடி டேவிஸ்புரம்சிலுவைப்பட்டியை சேர்ந்தவர் மாடசாமி. இவருடைய மகன் கிட்டா மணிகண்டன் (வயது 35). இவர் கடந்த 2016-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறை பணியில் சேர்ந்தார். தற்போது இவர் மணிமுத்தாறு பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று கிட்டா மணிகண்டன் நெல்லை வந்தார். அவர், ஒரு டாஸ்மாக் கடையில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் போதையில் அங்கு இருந்தவர்களிடம் தகராறு செய்தார். அப்போது கிட்டா மணிகண்டனுக்கு காயம் ஏற்பட்டது. அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். அவர்களை கிட்டா மணிகண்டன் தாக்கியதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜென்சி விரைந்து வந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் மதுபோதையில் கிட்டா மணிகண்டன் டாக்டர்களையும், பணியாளர்களையும் தாக்கியது தெரியவந்தது. இதுகுறித்து நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை போலீசார், கிட்டா மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com