எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வத்தலக்குண்டுவில் எல்.ஐ.சி. ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு எல்.ஐ.சி. ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஊழியர்கள் சங்க கிளை தலைவர் ரமேஷ் பாண்டியன் தலைமை தாங்கினார். வளர்ச்சி அதிகாரிகள் அலெக்ஸ், கோபால், முகவர் சங்க பொறுப்பாளர் திருப்பதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, எல்.ஐ.சி.யின் அரசுப்பங்கை தனியார்மயமாக்கும் சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் எல்.ஐ.சி. ஊழியர்கள், அதிகாரிகள், முகவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊழியர் சங்க கிளை பொறுப்பாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com