திருத்துறைப்பூண்டி அருகே மதுபாட்டில்களை உடலில் கட்டி நூதன முறையில் கடத்தி வந்த 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டி அருகே மதுபாட்டில்களை உடலில் கட்டி நூதன முறையில் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
திருத்துறைப்பூண்டி அருகே மதுபாட்டில்களை உடலில் கட்டி நூதன முறையில் கடத்தி வந்த 2 பேர் கைது
Published on

திருத்துறைப்பூண்டி,

புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசுமதி, சப்-இன்ஸ்பெக்டர் வரலட்சுமி, மற்றும் போலீசார் திருத்துறைப்பூண்டியில் அருகே உள்ள கச்சனம், கடைத்தெருவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் அவர்களை சோதனை செய்த போது அவர்களில் உடலில் மதுபாட்டில்களை கட்டி இருந்தது தெரிய வந்தது.

போலீசார் நடத்தி விசாரணையில் அவர்கள் திருக்கிளர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 28), ஆதிச்சபுரம் பகுதியை சேர்ந்த மனோகர் (29) என்பதும் அவர்கள் தங்களது உடலில் மதுபாட்டில்களை கட்டி கரைக்கால் பகுதியில் இருந்து நூதன முறையில் கடத்தி வரப்பட்டதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ், மனோகர் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 48 மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com